அரசாங்கத்துக்கு எதிராக அரச, மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
கல்வி, போக்குவரத்து, பெருந்தோட்ட தொழிலாளர்கள், துறைமுகம், மின்சாரம், வங்கி, தபால், சமுர்த்தி, அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் முதலீட்டு வலய சேவையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
யாழ்ப்பாணம், நுவரெலியா, ஹப்புத்தளை,மன்னார், வவுனியா, மட்டக்களப்பு என நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையால் பல அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.