மருதானை புனித ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று தீ பரவியுள்ளது.
தீயை அணைக்க பல தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.