களனி – வராகொட பகுதியில், நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தங்கியிருந்த வீட்டுக்கு நேற்றிரவு சென்ற குழுவொன்று, அவர் மீதும், அவரது மகன் மீதும், தாக்குதல் நடத்திவிட்டு, தங்க ஆபரணங்கள் மற்றும் காணி உறுதிப்பத்திரம் என்பனவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், 63 வயதான தந்தை உயிரிழந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் கைதுசெய்யப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன