Date:

முப்பெரும் பீடாதிபதிகளுக்கு ஜனாதிபதி பதில் கடிதம்

தற்போதைய நிலைமை குறித்து முப்பெரும் பீடாதிபதிகள் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு சம்மதிப்பதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி முப்பெரும் பீடாதிபதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய நாடாளுமன்றம் தீர்மானித்தால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு கடந்த வாரம் அறிக்கையொன்றில் பிரதம தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் ‘சங்க மாநாடு’ ஒன்றை பிரகடனப்படுத்துவோம் என தலைமை பீடங்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் 20வது திருத்தத்தை நீக்கி 19வது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் பெய்யும் கறுப்பு மழையால் சுவாசப் பிரச்சினைகள்

ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...