சீனாவிலுள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இலங்கைக்கு நிதியுதவியினை வழங்கியுள்ளது.
Hangzhou இல் உள்ள பாடசாலை மாணவர்கள் குழுவினரே இவ்வாறு நன்கொடை வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
குறித்த நிதியானது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்வதற்கு உதவுமென நம்பப்படுவதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.