வீதிகளை மறித்து மக்கள் நடமாட்டத்தை தடுப்பது வன்முறையற்ற போராட்டங்களுக்கு உரிய தீர்வாக அமையாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், போராட்டங்களை நடாத்துவதற்கு அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு எனவும், அது அடிப்படை உரிமையாகுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்தப் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு நியாயமான நடவடிக்கைகளை மாத்திரம் பொலிஸார் முன்னெடுக்க முடியுமெனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.