சீமெந்தின் விலையை அதிகரிக்க சீமெந்து இறக்குமதியாளர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை, இலங்கை ரூபாவிற்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகின்றமை இதற்கான காரணம் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் சீமெந்தின் புதிய விலையை தீர்மானிப்பதற்கான இறுதி கலந்துரையாடல் இதுவரை இடம்பெறவில்லை என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தையில், சீமெந்து ஒரு மூடை 2 ஆயிரத்து 350 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.