இலங்கைக்கு அரிசி, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் GL பீரிஸ் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஆகியோருக்கு இடையே நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் காணப்படும் நிலைமைகள் தொடர்பில் சீனா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான சீன தூதுவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின் நேரடி ஒத்துழைப்பு மற்றும் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்பு உள்ளிட்ட வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட் 2 ஆயிரம் மெட்ரின் டொன் அரிசி உள்ளிட்ட 5 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இலங்கைக்கு வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 1 தசம் 5 மில்லியன் renminbi பெறுமதியான உணவுப் பொதியையும் இலங்கைக்கு வழங்க சீனா இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.