Date:

LankaPay Technovation விருது வழங்கும் நிகழ்வில் நான்கு விருதுகளை தனதாக்கிக் கொண்டது HNB

இலங்கையின் முதன்மையான தனியார் துறை வங்கியான HNB PLC அண்மையில் LankaPay Technnovation Awards 2022 இல் நான்கு விருதுகளைப் வென்றுள்ளது.

HNBஆனது இந்த ஆண்டின் மதிப்புமிக்க வங்கியாக நிதியை உள்ளடக்கியதற்காகவும், வாடிக்கையாளர் வசதிக்கான தலைப்புகளில் சிறந்து விளங்கியதற்காகவும் ஆண்டின் சிறந்த வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டது. புத்தாக்கமான டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வுகளின் வெகுமதியாளர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்கும் வகையில் கொழும்பு Shangri-Laவில் நடத்தப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்விற்கு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கெளரவ அதிதியாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா, நடுவர்கள் குழுவின் தலைவர் ஓஷத சேனாநாயக்க மற்றும் LankaClear தலைவர் டொக்டர் கென்னத் டி சில்வா மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த HNB பிரதிப் பொது முகாமையாளர்- சில்லறை வர்த்தகம் மற்றும் SME வங்கியியல் சஞ்சய் விஜேமான்ன, “இலங்கையை டிஜிட்டல் ரீதியில் வலுவூட்டப்பட்ட நாடாக மாற்றுவதற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ள அனைத்து வெற்றியாளர்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் முதலில் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம். இதுபோன்ற மதிப்புமிக்க நிகழ்வில் புத்தாக்கமான டிஜிட்டல் கட்டண தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

“தொற்றுநோயிலிருந்து, வாடிக்கையாளர்களுக்கு பணமில்லா மற்றும் தொடுகை இல்லாத சூழலை வழங்க டிஜிட்டல் முறையில் அதிகாரம் அளிப்பதில் நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். நாடு முழுவதும் பணம் செலுத்தும் தீர்வுகளின் டிஜிட்டல் விரிவாக்கத்தை ஆதரித்து ஊக்குவித்த குறிப்பிடத்தக்க அமைப்பான LankaPay, டிஜிட்டல் ரீதியில் வலுவூட்டப்பட்ட தேசத்தைக் உருவாக்குவதற்கான HNBஇன் நோக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.”

மேலும், வாடிக்கையாளர் வசதிக்காக சிறந்து விளங்கியதற்காக ஆண்டின் சிறந்த வங்கிக்கான தங்க விருது மற்றும் நிதி உள்ளடக்கிய பிரிவுகளுக்கான ஆண்டின் சிறந்த வங்கிக்கான தங்க விருதினையு வழங்கப்பட்டது. அத்துடன் HNB இந்த ஆண்டின் ‘Digital Payment Strategy’ நிதி நிறுவனத்துக்கான வெள்ளி விருதையும், ஆண்டின் ‘Overall Award – Excellence in Interbank Digital Payments’க்காக (வங்கி நிறுவனங்கள்) வெண்கல விருதினையும் வென்றது.

நாட்டில் பணம் செலுத்தும் தொழில்நுட்ப புத்தாக்கங்களின் முன்னோடிகளை அங்கீகரிக்கும் நோக்கில், தேசிய கட்டண வலையமைப்பின் செயல்திறனை மேம்படுத்தும் LankaPay Technnovation விருது வழங்கும் நிறுவனம் 2017இல் ஆரம்பிக்கப்பட்டது.

உலகம் தடையின்றி டிஜிட்டல் ஊடகங்களுக்கு மாறிக்கொணடிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது, குறிப்பாக நிதித் தேவைகள் தொடர்பாக. HNB இந்த மாற்றத்தை தொடர்ந்து புரிந்துகொண்டு, சராசரி வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப வங்கியால் அமைக்கப்பட்ட டிஜிட்டல் கோப்புறை (Portfolio) மற்றும் மூலோபாயத்தை மேம்படுத்த வேலை செய்யும். எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு ஊழியரையும் எமது கொள்கையை நிறைவேற்றுவதற்கு கவனத்தை திருப்பியதற்காக நான் வாழ்த்துகிறேன், மேலும் நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி புத்தாக்கங்களை உருவாக்குவோம்.” என HNBஇன் பிரதிப் பொது முகாமையாளர்- சில்லறை வர்த்தகம் மற்றும் SME வங்கியியல் சஞ்சய் விஜேமான்ன கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373