நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாம் போராட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த விட்யம் குறித்து வினவிய போது அவர்கள் தெரிவித்ததாவது,
‘நாங்கள் இப்போது இலங்கையின் கொழும்பு காலி முகத்திடலில் இருக்கிறோம். நிறைய பேர் இருக்கிறார்கள். மாலையிலும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் நாங்கள் இங்கு வந்துள்ளோம். நாட்டில் போதிய வௌிநாட்டு கையிருப்பு இல்லை நமது பொருளாதாரம் பாரிய சரிவை எதிர்கொண்டுள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. மக்களுக்கு வேலை இல்லை. மின்சாரம் இல்லை மக்களுக்கு எரிபொருள் இல்லை.
இந்த நிலை நாட்டின் உள்ள ஒவ்வொரு நபரையும் பாதிக்கிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக பல நாட்களாகநாட்டின் பலபகங்களிலும் மக்கள் திரண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை முதல் அனைவரும் ஒரே குரலில் காலி முகத்திடலில் ஒன்றுதிரட்டுள்ளோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். மேலும்இ நாட்டை நிலைநிறுத்துவதற்கு அரசு பல அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இங்கு எவ்வளவு பேர் ஒன்றுதிரட்டுள்ளார்கள் உன்பதை உங்களால் பார்க்ககூடியதாக உள்ளது அல்லவா?.
எந்த ஒரு அரசில் பின்புலமும் இல்லாது அவர்களாக சுயமாக முன்வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பலர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்பவர்களுக்கு தேவைான உணவு குடிநீர் மற்றும் முதலுதவி பொருட்களை வழங்கிவருகின்றனர். நாங்கள் அனைவரும் ஒரே குரலில் நாட்டு தலைவர்களிடம் தீர்வை கோரி இங்கு வந்துள்ளோம்.’