நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த யோசனையை கையளித்துள்ளதாக நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கொலை செய்யப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றுசில அமைச்சர்கள் கறுப்பு நிற ஆடையில் பாராளுமன்றம் வந்திருந்தமையும் அவதானிக்க முடிந்தது.