ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை காவல்துறை மேற்கொள்ளும் எனவும் குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது என எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து பொதுமக்களும் வன்முறையை தவிர்க்குமாறு ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் மேலும் கோரியுள்ளார்.