ரம்புக்கனையில் இடம்பெற்ற விடயமானது அரசியல் விடயமாக கருதுகிறேன். அங்கு உயிரிழந்த நபர் பவுசருக்கு தீ வைக்க வந்த நபர் அல்ல. அவரை நான் நன்கு அறிவேன் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க ஆட்சியின் போது மிகவும் நெருக்கடியான காலங்களில் கூட மக்களுக்கு எண்ணெய் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்தார்.
எனவே, இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதை நாம் கண்டறிய வேண்டும். அனைத்து கட்சித் தலைவர்களும் இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும். எமது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிப்போம்- என்றார்.