Date:

வவுணதீவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் தீ விபத்து

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வவுணதீவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

விற்பனை நிலையம் நேற்று மாலை மூடப்பட்டதன் பின்னர் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து வவுணதீவு பொலிஸாரும் மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் வர்த்தக நிலையத்திலிருந்த இலத்திரனியல் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தீப்பரவல் சம்பவமானது மின் ஒழுக்கா அல்லது வேறு காரணங்கள் ஏதுவும் உள்ளதா என்பது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ காரணமாக குறித்த வர்த்தக நிலையத்திற்கு சுமார் 20 இலட்சம் ரூபாவுக்கு மேல் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் மக்களுக்கு மிகவும் விலை குறைந்த நிலையிலேயே பொருட்களை வழங்கிவந்ததாக ஈச்சந்தீவு-கன்னங்குடா பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் நாகலிங்கம் உருத்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...