பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் சென்றுள்ளனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக பேரவையில் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை மட்டகளப்பு மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட மூன்று பேர் இன்று காலை சென்றடைந்துள்ளனர்.
ஏற்கனவே, இலங்கையின் 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தது குறிப்பிடத்தக்கது.