Date:

பதவி விலகுவாரா மஹிந்த ? புதிய பிரதமர் யார்?

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவதற்கு ஆலோசித்து வருவதாக இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்றின் நிலையை கருத்திற்கொண்டும் வேறு சில அரசியல் காரணங்களுக்காகவும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதமர் பதவிக்காக டலஸ் அழகப்பெரும, நாமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

ஏப்ரல் மாத முதல் வாரத்தில் பதவியிலிருந்து விலகுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருந்த போதும், சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு அமைவாக அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், பிரதமர் பதவி விலகுவாரானால் ஆளுங்கட்சியில் உள்ள பெரும்பான்மையான எம்.பிக்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானம் மேற்கொள்வார்கள் எனவும், எனவே தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருக்க வேண்டுமென ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை வலியுறுத்தி வருவதாகவும் ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...