Date:

கடவத்தை விவகார சந்தேக நபர் தண்ணீர் தாங்கிக்குள் மறைந்திருந்த போது பொலிஸாரால் கைது

கடவத்தையில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தை உடைத்ததாக கூறப்படும் 32 வயதுடைய சந்தேக நபர் கட்டிடத்தின் கூரையில் உள்ள தண்ணீர் தாங்கிக்குள் மறைந்திருந்த போது பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள், திருடப்பட்ட 27 மில்லியன் பணத்துடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர.

சந்தேகநபர் நேற்று முன்தினம் (15) ஆடை விற்பனை நிலையத்தை உடைத்து, பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை டிரில் இயந்திரம் மூலம் திறந்து பார்த்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் எதிர்பாராதவிதமாக அதிகாலை வேலைக்குச் சென்றதால் தப்பிச் செல்வதற்கான தனது திட்டம் தோல்வியடைந்ததாகத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (16) மஹர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...