ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் 8ஆவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது.
ஏறக்குறைய 15 பொலிஸ் வாகனங்கள் இன்று போராட்டத் தளத்திற்கு அருகே நிறுத்தப்பட்டதை அடுத்து, போராட்டம் ஒடுக்கப்படலாம் என்று பலர் சமூக ஊடகங்களில் கவலை தெரிவித்தனர்.