நாளை யாழ் .நகரில் இளையோர்களின் ஏற்பாட்டில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது .
இப்போராட்டமானது கோட்டா கோ கம வில் அரச தலைவரையும் , அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கடந்த ஏழு நாட்களுக்கு மேலாகியும் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .