நாட்டின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் போதுமான பணத்தை செலவிடவில்லை. அரசாங்கம் செலவிடும் தொகையானது ‘சுகாதாரதுறையின் தரத்தை கொண்டுநடத்தவோ அல்லது அதன் தரத்தை உயர்த்தவோ போதுமானதாக இல்லை’ சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டு உலகின் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையும் சுகாதாரத் துறையில் கொள்கை வகுப்பில் முன்னேறி வருகின்றது என இலங்கை சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
‘ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நமது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மேம்பாட்டுத் திட்டம்கள் நமது நாட்டின் சுகாதார துறைக்கு கிடைக்கபெறும் நன்கொடைகளில் மிகப்பெரிய நன்கொடையாகும்.
எமது நாட்டின் சுகாதார துறையின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்படும் நிறுவனமே ஆசிய அபிவிருத்தி வங்கியாகும். சுகாதார சேவைகளுக்காக எமது நாட்டு அரசின் வரிப்பணத்தினால் ஒதுக்கப்படும் தொகையானது இந்த சுகாதார சேவையின் தரத்தை பேணுவதற்கு போதுமானதாக இல்லை என்பதை நாம் அறிவோம்.
ஆசிய அபிவிருத்தி வங்கினால் சர்வதேசரீதியாக கவனம் செலுத்தும் முக்கிய நாடுகளில் இலங்கையும் ஒன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் எமது நாட்டின் சுகாதார துறையின் வளர்ச்சிக்குஇ மேம்பாட்டிற்காக சில திட்டங்களை கொள்கைகளை முன்னெடுக்கும் அவை சிறந்த ஒன்றாகும். ‘
‘இந்த நிறுவனம் போன்றே மற்றும் பல நிறுவனங்களும் எங்களுக்கு உதவுகின்றன.குறிப்பாக நமது நாட்டில் ஆரம்ப சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு ஆசிய வளர்ச்சி மேம்பாட்டு நிதியத்தின் பங்களிப்பு மகத்தானது.
எமது சுகாதார அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியை நாம் நினைத்துக்கூடப் பார்க்காத அளவிற்கு அடிப்படை ஆரம்ப சுகாதாரத் துறையை அதிகரிப்பதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
ஏனெனில் எமது நாட்டில் தற்போது தொற்றாத நோய்களில் அதிக கவனம் செலுத்தாது தொற்றும் நோய்களில் கவனம் செலுத்தப்படுகின்ற ஒரு நிலையினையே பார்க்கின்றோம். இலங்கையில் தொற்றா நோய்கள் காரணமாகவே சரசரியாக நூற்றுக்கு 82 வீதம் தொடக்கம் 83 வீதமான மரணங்கள் பதிவாகின்றன. .எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம்தான் தொற்றாத நோய்களைத் தடுக்கவும்இ கட்டுப்படுத்தவும் முடியும். நம் நாட்டில் உள்ள முக்கிய வைத்தியசாலைகளில் மக்கள் படும் அசெகரியம் போன்று பிரதான வைத்தியசாலைகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு அப்பாற்பட்ட நோய்களையும் தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன.’ என கருத்து தெரிவித்தார்