ஆசிய அபிவிருத்தி வங்கியானது (ADB)இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு பல அம்பியூலன்ஸ்கள் மற்றும் வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. நன் கொடையாக கிடைக்கப்பெற்றுள்ள அம்பியூலன்ஸ்கள் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.ஆசிய அபிவிருத்தி வங்கி நீண்டகாலமாக நாட்டின் சுகாதாரத் துறைக்கு தொடர்ந்து உதவிவருவதாக சுகாதார போசாக்கு மற்றும் வைத்தியத்துறை முன்னாள் அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் இத்துறையை முன்னெடுத்து செல்ல அரசினால் போதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவில்லை எனவே நோயாளர்களுக்கு உதவுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் இந்த நன்கொடையின் முக்கியமானது என வைத்தியர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார்.
இந்த விடயம் தொடர்ப்பில் மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் ராஜித சேனாரத்ன,
‘ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக 25 அம்பியூலன்ஸ்கள் மற்றும் 38 வாகனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. நான் பதவி வகித்த காலத்தில் நான் 350 அம்பியூலன்ஸ்கள் சுகாதார அமைச்சகத்திற்கு கொண்டு வந்தேன்.அந்த அம்பியூலன்ஸ்கள் அனைத்தும் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் மற்றும் ஃபோர்டு அம்பியூலன்ஸ்கள் ஆகும்.
தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ள ஆம்புலன்ஸ்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அம்பியூலன்ஸ்கள் ஆகும். அவை அம்பியூலன்ஸ்கள் அல்ல வேன்கள் ஆகும் பல்வேறு உபகரணங்கள் இணைக்கப்பட்டு அம்பியூலன்ஸ்களாக மாற்றப்பட்டவையாகும். ஆனால் என்னுடைய பதவி காலத்தில் நான் கொண்டுவந்தவை அம்பியூலன்ஸ்களுக்காகவே தயாரிக்கப்பட்ட அசல் அம்பியூலன்ஸ் பிரத்தியேக வாகனங்ககள் ஆகும்.’
இந்த அரசாங்கத்தினால் கடந்த இரண்டரை வருடங்களாக சுகாதார துறையின் வளர்ச்சிக்காக எந்த ஒரு செயற்த்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே எந்த ஒரு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்காமல் இருக்கும் அரசாங்கத்திற்கு அசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள குறித்த நன்கொடை உண்மையிலேயே ஒரு சிறந்த சேவை என்று நான் நினைக்கிறேன் என கருத்து தெரிவித்தார்.