Date:

21 மில்லியன் மக்களின் எதிர்காலம் 226 பேரினால் நாசமாக்கப்பட்டுள்ளது – குமார் சங்கக்கார

நாட்டில் 226 பேரினால், 21 மில்லியன் மக்களின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது, மிகவும் விழிப்பான, உறுதியான மற்றும் தைரியமான தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குமார் சங்கக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 226 பேரினால் 21 மில்லியன் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியதாகப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இத்தனை காலமும் எம்மால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் ஆட்சி கொள்கைகளினால் நாடு மிகவும் மோசமான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமது நாட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறித்து அரசியல் தலைவர்கள் ஒருபோதும் வருத்தமடைய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மற்றும் காபந்து அரசாங்கம் பற்றிய விவாதங்கள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு உடனடியாக குறுகிய கால அல்லது நீண்ட கால தீர்வு ஒன்று கட்டாயம் வேண்டும் என குமார் சங்கக்கார சுட்டிக்காட்டினார்.

எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகளை மக்கள் இனிமேலும் நம்பமாட்டார்கள் என குமார் சங்கக்கார தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...