Date:

போராட்டங்கள் நடத்தப்படுவதால் பயனில்லை- முத்தையா முரளிதரன்

போராட்டங்கள் நடத்தப்படுவதால் பயனில்லை என இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் இடம்பெறுவதனால், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வரமாட்டார்கள்.

இதனால், வருமான இழப்பு ஏற்படும்.

எனவே, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அதனைக் கைவிட்டால், சுற்றுலாப் பயணிகள் வருவதன்மூலம், நாட்டுக்கு வருமான அதிகரிப்பு ஏற்படும் என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சி செய்தாலும் அல்லது எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தாலும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளைப் பெற இருக்கின்ற சந்தர்ப்பத்தில், இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தும் என்றும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...