ரம்புக்கன புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் கொள்கலன் ரயிலுடன் மற்றுமொரு ரயில் மோதியதில் பெருமளவிலான டீசல் வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (11) காலை இடம்பெற்றுள்ளது.
டீசல் கொள்கலன் ரயில் நிறுத்தியிருந்த தண்டவாளத்தில் பயணிகளை ஏற்றி வந்த ரயிலை நிறுத்த முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.