Date:

இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும்- நிதியமைச்சர்

அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ள இந்த நிதி அவசியம் என கூறினார்.

எரிபொருளுக்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை இலங்கை நாடும் என்றும் இது சுமார் 5 வார தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று சப்ரி கூறினார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சீனா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டவர்களின் ஆதரவையும் அரசாங்கம் கோரும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இதேவேளை அரச நிதியை சரிசெய்யும் முயற்சியில், நாடு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வரி விகிதங்களை உயர்த்தி எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...