Date:

நாளை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கப்படவுள்ளதாம்?!!

நாளைய தினம், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இடம்பெறவுள்ளதகவும், அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை அதில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அந்த தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகிறது.இந்தநிலையில் கையெழுத்துகள் பெறப்பட்டதன் பின்னர் அதனை சபாநாயகருக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்திலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் அரசாங்கத்திற்கு 113 என்ற பெரும்பான்மை இல்லை என்பதை வெளிப்படுத்துவதே தங்களது பிரதான நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...