நேற்று (07) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உபரி வரிச் சட்டமூலம் தொடர்பான சான்றிதழுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) ஒப்புதல் வழங்கினார்.
அதன்படி, இந்தச் சட்டம் 2022 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மேலதிக வரிச் சட்டமாக இன்று (08) அமுலுக்கு வரும்.
உபரி வரி சட்டம் நேற்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.