மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் குறித்த நியமனம் நேற்று பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டது.
மத்திய வங்கி ஆளுநராக செயற்ப்பட்ட அஜித் நிவார்ட் கப்ரால் தமது பதவியில் விலகிய நிலையில், மத்தியவங்கியின் புதிய ஆளுனராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தன நியமிக்கபட்டுள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளராக செயலாற்றிய எஸ் ஆர் ஆட்டிகல பதவி விலகியதை தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்கு மஹிந்த சிறிவர்தன நியமிக்கபட்டுள்ளார்