சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனது ஒரு வருட கால சம்பளத்தை உத்தியோகபூர்வமாக இன்று துறந்துள்ளார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது வாக்குறுதியளித்தபடி தனது பாராளுமன்ற சம்பளத்தை உத்தியோகபூர்வமாக கைவிடுவதாக எம்.பி அறிக்கையொன்றை வெளியிட்டார்.
தற்சமயம் பொருளாதாரம் மற்றும் நாட்டின் சுமையை குறைப்பதற்கு அரச ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான் நம்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.