50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இன்னமும் டெங்கு அதிஅவதான வலயங்களாக

50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இன்னமும் டெங்கு அதிஅவதான வலயங்களாகவே காணப்படுவதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்கள் தொடர்பான அண்மைய தரவுகளை வெளியிட்டு அந்தப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய, நடப்பு ஆண்டில் இதுவரை 95,174 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

ஓகஸ்ட் மாதத்தில் 9,838 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

2026 ஆம் ஆண்டில் இதுவரை 95,174 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

 

மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 50,358 ஆகும்.

 

தென் மாகாணத்தில் 13,854 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,659 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,825 நோயாளர்களும் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

 

மாவட்ட ரீதியில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,276 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த ஆண்டில் 72 டெங்கு மரணங்கள் சம்பவித்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

Breaking: ரவி கருணாநாயக்க கைது!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும்...