பிரதமர் ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்

உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS) பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

செப்டம்பர் 1 ஆம் திகதி பூட்டானில் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பங்கேற்கவுள்ளதுடன், அங்கு “நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வோடு எழுச்சி பெறுதல்” (Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis) என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றவுள்ளார்.

இப்பயணத்தின் போது பிரதமர், சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன், நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்பிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் வளர்ச்சிக்குபுதிய ஆலோசனை சபை -இல்ஹாம் மரிக்கார்...

கல்விச் சிறப்பு, தரமான கல்வி, தொழில்முறை மேம்பாடு மற்றும் நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வரும் அமேசன் கல்லூரி மற்றும்...

இந்த ஆண்டில் இதுவரை 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

இவ்வாண்டில் இதுவரை இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.   இன்று (15) நடைபெற்ற...