இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சி உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா “மீண்டும் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சி நிராகரித்தாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.