சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு வழிவகுத்த காரணிகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் வெல்கம குற்றம் சுமத்தியுள்ளார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சாபத்தை தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.