Date:

2021 SLIM NASCO விருது வழங்கும் நிகழ்வில் Airtel Lankaவின் நுவான் பெர்னாண்டோ தங்கம் வென்றார்

எயார்டெல் லங்கா தனது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தனது முதலீட்டின் வெற்றியை எடுத்துக்காட்டும் வகையில், இம்முறை SLIM NASCO விருது வழங்கும் நிகழ்வில் பிராந்திய முகாமையாளர் பிரிவில் தங்க விருதை வென்றுள்ளது.

எயார்டெல்லின் பிரதி பிராந்திய விற்பனை முகாமையாளர் நுவன் பெர்னாண்டோ, 2020 NASCO விருது வழங்கும் நிகழ்வில் நடுவர் குழுவுடன் இடம்பெற்ற நேர்காணலுக்காகவும், அவரது முழுமையான அர்ப்பணிப்பு, செயல்திறன் மற்றும் மூலோபாய பங்களிப்புகள் குறித்த அவரது வெற்றிகரமான படைப்பாற்றல் திறனுக்காக தங்க விருதைப் பெற்றுள்ளதுடன் மற்றும் நிர்வாகக் கண்ணோட்டத்தில் அவரது குழுவை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தலைமைப் பொறுப்பை உடையவராக நிறுவனத்தின் நற்பெயரை நிலைநிறுத்துவதில் ஆற்றிய பங்களிப்பையும் திரு. நுவன் இதன்போது சிறப்பித்துக் காட்டியுள்ளார்.

NASCOவின் நடுவர் குழுவுடனான சிறந்த நேர்காணல் மற்றும் தங்க விருதை வென்றதற்காகவும் நுவன் பெர்னாண்டோ அனைத்து நிறுவனங்களின் தங்க விருதினை வெற்றிபெற்றதனாலும் கௌவரவமாக வழங்கப்படும் ‘Best of the Best’ பிரிவில் உள்ளடக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்க்கது. இது குறித்து கருத்து தெரிவித்த எயார்டெல் லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷிஷ் சந்திரா, “எமது விற்பனை குழு உறுப்பினர்களுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கற்றல் மற்றும் அபிவிருத்தி முயற்சிகள் எமது நிறுவனத்திற்குள் வழங்கப்படும் பயனுள்ள பயிற்சித் திட்டங்களின் மூலம் சரியான நேரத்தில் அவர்களின் திறன்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து எங்களால் அவர்களுக்கு திறன்களை வழங்கவும் மேம்படுத்தவும் முடிந்தது. இந்த முயற்சிகள் நிச்சயமாக எங்கள் போட்டியாளர்கள் மற்றும் குறிப்பாக நுவன் அத்தகைய விருது வழங்கும் நிகழ்வில் அங்கீகரிக்கப்படுவதற்கு உதவியிருக்கும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

எயார்டெல் லங்கா தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது மற்றும் அதன் பணியாளர்களை மேம்படுத்துவதற்கான போட்டித் தளத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நிறுவனம் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும் விருது வழங்கும் நிகழ்வுகள் மூலம், அதன் முழுப் பணியாளர்களுக்கும் உள்ள இலக்குகளைப் பின்தொடர்வதில் தீவிர ஆர்வத்தையும் போட்டி மனப்பான்மையையும் உறுதி செய்கிறது.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தால் (Sri Lanka Institute of Marketing) ஒழுங்கமைக்கப்பட்ட SLIM NASCO விருது வழங்கும் நிகழ்வு, இலங்கையின் விற்பனைத் திறமைகளை அங்கீகரித்து, ஊக்குவித்து, விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தும் வருடாந்த தேசிய நிகழ்வாகும். விற்பனைத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை அங்கீகரிப்பதற்காக இலங்கையில் நடைபெறும் ஒரேயொரு விருது வழங்கும் நிகழ்வு இதுவாகும்.

குறிப்பாக, தொற்றுநோய் பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் விற்பனைத் துறையின் சிறப்பிற்காக இந்த முன்னணி விருது வழங்கும் நிகழ்வின்போது அங்கீகரிக்காரத்திற்குட்பட்டமையினால் நிறுவனத்தில் இதைவிட உயர்ந்த நிலையை அடைய சரியான வழிகாட்டுதலை வழங்குகிறது. சிறந்த நடுவர் குழுவினால் SLIM NASCO விருது வழங்கும் நிகழ்விற்காக ஏற்றுக் கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்குள் நாட்டின் சிறந்த விற்பனை திறமைசாலிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். விற்பனைத் துறையிலுள்ளவர்களுக்காகவுள்ள ஒரேயொரு நம்பகமான மற்றும் கௌரவமான விருது வழங்கும் நிகழ்வாக SLIM NASCO விற்பனை திறமைசாலிகள் மற்றும் நிறுவனங்களுக்காக கௌரவமான அளவுகோலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373