Date:

எங்களுடைய முன்னேற்றத்திற்கு பின்னால் இருந்த அடிப்படையான பலமே HNB Finance நிறுவனம் தான்

சொந்தமாக தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று கனவு காணும் பலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, அவர்கள் செய்யக்கூடிய அதிக இலாபம் தரும் தொழில் என்ன என்பதுதான். அவர்களின் கல்விப் பின்னணி, சமூக நிலை, நவீன தொழில்நுட்பங்களுக்கான விருப்பம், …. இப்படிப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில், தாங்கள் வாழும் சமூகத்தில் மிக எளிதாக என்ன தொழில் செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்தி, சிறுதொழிலாக ஆரம்பித்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசித்த அற்புதமான தொழில்முனைவோர்களாக உள்ள ஒரு தம்பதியை சமீபத்தில் சந்தித்தோம். இந்த அனுபவங்களை உங்கள் வாழ்க்கையிலும் பயன்படுத்த முடியும் என்ற தூய உணர்வோடு திரு. டபிள்யூ.எம்.ஏ. நிஷாந்த அவர்கள் உங்கள் முன் கதைக்கும் வாய்ப்பை வழங்கினோம்.

பாடசாலை படிப்பு முடிந்ததும் என் வேலையில் கவனம் செலுத்தியதால், சொந்தமாக தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்…. எனது சொந்த ஊரான மினுவாங்கொடை மாம்பழங்களுக்கு பெயர் பெற்ற இடமாகும். இந் பகுதியில் கோபிவத்த பொரகொடவத்த மடமுல்ல எனப்படும் பல சிறிய கிராமங்கள் மாம்பழங்களுக்கு பெயர் பெற்றவை. ஒரு புதிய தொழிலைத் தொடங்கும்போது, ​​நமக்குத் தேவையான மூலப்பொருளை எளிதாகக் கண்டுபிடிக்கும் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் மாம்பழங்களை சேர்த்து விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தேன்….. அந்த எண்ணத்தில் 1988-ம் ஆண்டு வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியில் மரப்பெட்டியொன்றைக் கட்டி, நான் முன்பு சொன்ன கிராமங்களுக்குச் சென்று, அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து மாம்பழங்க எடுத்து விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பித்தேன். இதுவே இந்த வியாபாரத்தின் ஆரம்பம்… காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை விஸ்தரிக்க முடிந்ததால், இந்த தொழிலை முன்னேற்ற சைக்கிளில் சென்று மாம்பழங்களை சேகரிப்பது கடினம் என்பதை உணர்ந்தேன்…. அப்போது என்னிடம் ஒரு CD 125 மோட்டார் சைக்கிள் ஒன்று இருந்தது….. நான் இந்த மோட்டார் சைக்கிளுடன் மேலும் ஒரு தொகையை கொடுத்து எனது நண்பரிடம் இருந்து Isuzu ELFஐ வாங்கினேன்….. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மாம்பழம் வளரும் பருவங்கள் உள்ளன. அதன்படி, அந்த பகுதிகளில் உள்ள எங்கள் நட்பு வியாபாரிகள் மூலம், மாம்பழம் கிடைக்கும் நேரங்களை அறிந்து, அந்த பகுதிகளுக்கு சென்று மாம்பழங்களை சேகரிப்பேன்…. வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைந்ததால் நாங்கள் எதிர்கொண்ட ஒரு பெரிய பிரச்சனை, வியாபாரத்தின் அவசர பணத் தேவைக்கு கையில் பணம் இல்லாதது. அந்த நேரத்தில் நான் என் மனைவியிடம் இதைப் பற்றி பேசினேன்…..”

தற்போது நிஷாந்தவின் இந்த வார்த்தைகளுக்கு மேலும் உறுதுணையாக இருந்த நிரோஷா குமுதினியின் வார்த்தைகளும் இதற்கு இன்னும் மெருகேற்றுமென அவரிடமும் கேட்டோம்.

“அப்போது மெடமுல்ல பிரதேசத்தில் வணிகக் கடன் வழங்கும் நிறுவனம் ஒன்று தமது நிலையத்தை அமைத்துள்ளதாக நான் அறிந்தேன். கிராமத்தில் வியாபாரம் செய்யும் பல பெண்கள் இந்த நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அந்த பயணத்தில் அந்த நிலையம் மூலம் HNB FINANCEஇல் சேர்ந்தேன். பல வணிக உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று பண வசதிகளுக்காக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதை மீண்டும் வியாபாரத்தில் ஈடுபடுத்த கடன் தேவைப்படும்….. கடன் கேட்டு அது வரும் வரை காத்திருக்க முடியாது…. எங்களது கடன் பரிவர்த்தனைக்காக HNB FINANCEஐத் தொடர்பு கொண்டோம், ஏனெனில் எங்களது பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும்….. நிதி நெருக்கடியின் போது மாம்பழங்களை வாங்குவதற்கு HNB FINANCE வழங்கும் முதல் கடனைப் பயன்படுத்தினோம்…… HNB FINANCE திரிய கடன் திட்டத்தின் மூலம், எங்களது தேவைகளுக்காக பலமுறை கடன்களை பெற்று, உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தினோம். HNB FINANCEஇன் அதிகாரிகள் எங்களிடம் வந்து கடன் தவணைகளை பெற்று தொழிலை கவனித்து எங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது பெரும் நிம்மதி….. இந்த வணிகத்திற்காக நாங்கள் கடன்களைப் பெறுவதற்கு முன்பு நாங்கள் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருந்தோம், ஆனால் அவை எதுவும் HNB FINANCE போன்ற எங்கள் தேவைகளைப் புரிந்துகொண்டு அத்தகைய நட்புரீதியான சேவையை வழங்கவில்லை….. எனவே, இன்று எங்கள் வணிகத்தின் அனைத்து நிதித் தேவைகளும் HNB FINANCE மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.

Nirosha Fruit Supplierவின் நடவடிக்கையானது அதன் தொடக்கத்தில் இருந்து பல பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து திரு. நிஷாந்த எங்களிடம் கூறுகையில்,

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மாம்பழங்களை சேகரிக்கும் மத்திய நிலையமாக இது பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களில் இருந்து மாம்பழங்களை வாங்கி வருகிறோம். மேலும், பேலியகொட மெனிங் சந்தை, கார்கில்ஸ் ஃபுட் சிட்டி மற்றும் சிபிஎல் ஆகியவற்றிற்கு மாம்பழங்களை வழங்குகிறோம்…. அண்மையில் மத்திய கிழக்கு சந்தைக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமும் எங்களிடம் இருந்து மாம்பழங்களை வாங்குகிறது.

இந்தத் தொழிலை சிறிய அளவில் ஆரம்பிக்கையில் இந்த தூரம் வர முடியுமென நானும் என் மனைவியும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனது மனைவி வணிகத்தை ஆரம்பத்திலிருந்தே இந்த நிலைக்குக் கொண்டு வர அவருக்குக் கிடைத்த ஆதரவும் உற்சாகம் காரணமாக இந்த வணிகத்திற்கு Nirosh Fruit Supplier என்று பெயரிட்டார். தற்போது எனது இந்த வியாபாரத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கு உதவி செய்ய என்னிடம் பல ஊழியர்கள் உள்ளனர்…. எங்களிடம் மாம்பழம் சேகரிக்க மூன்று லொரிகள் உள்ளன. அந்த லாரிகளில் ஒன்றை HNB FINANCE Leasing மூலம் வாங்கியதுடன் HNB FINANCE எப்போதும் எனது வணிக நிதி பங்குதாரராக வணிகத்துடன் நெருக்கமாக இணைந்திருப்பதால் இன்று என்னால் வீட்டை கட்டவும், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும், வணிகத்தை இந்த நிலைக்கு கொண்டு வரவும் முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373