Date:

சிங்கிதி ஜம்போ மூலம் சேமிக்கும் சிறார்களுக்கு பரிசு மழையைப் பொழியும் HNB

ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் குழந்தைகளின் தற்போதைய நல்வாழ்வைப் பொறுத்தது. அதற்கு குழந்தைகளை வடிவமைக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு மட்டுமல்ல, நாட்டின் குழந்தைகள் மீது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சிறப்பு கவனம் செலுத்துவதும் அவசியமானது. இலங்கையிலுள்ள மிகவும் வாடிக்கையாளர்களுக்கு உகந்த வங்கிகளில் ஒன்றான HNB, இலங்கையில் உள்ள குழந்தைகளுக்குச் சேமிக்கக் கற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக ஒவ்வொரு வருடமும் பல்வேறு குழந்தை நட்பு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அதன் அத்தியாயங்களில் ஒன்றாக, சிங்கிதி ஜம்போ அவுருது நிகழ்ச்சித் திட்டம், வரவிருக்கும் புத்தாண்டுக் காலத்துக்காக, அதன் குழந்தை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகள் மற்றும் வவுச்சர்களை வெல்லும் வாய்ப்புடன் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 15 முதல் ஏப்ரல் 29 வரை நடைபெறும் இந்தத் திட்டத்தின் கீழ், 16 வயதுக்குட்பட்ட அனைத்து HNB சிங்கித்தி மற்றும் சிறுவர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு HNB மதிப்புமிக்க பரிசுகள் மற்றும் தனித்துவமான அனுகூலங்களை வழங்கும்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த HNB வைப்புகளுக்கான பிரதானி வீரங்க கமகே, “இந்த வருடத்தின் மகிழ்ச்சியை எங்களின் சிறார் கணக்கு வைத்திருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சிங்கிதி ஜம்போ அவுருது மூலம் உள்ளூர் நாணயத்தில் மட்டுமின்றி வெளிநாட்டு நாணயத்திலும் சேமிக்கும் குழந்தைக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளோம். இலங்கை நாணயத்தில் ரூ.5000/= முதல் ரூ.1,000,000/= வரையிலும், அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் US$50 முதல் US$5000 வரை வெளிநாட்டு நாணயத்திலும் வைப்பீடு செய்யும் கணக்கு உரிமையாளர்கள் HNB இலிருந்து பரிசு மற்றும் வவுச்சர்களைப் பெறலாம். HNB சிங்கித்தி மற்றும் Teen கணக்குகளில் நீங்கள் வைப்பு செய்யும் பணத்திற்கு கவர்ச்சிகரமான வருமானத்தை வழங்குவதன் மூலம் உங்கள் குழந்தைக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.

சமீபத்திய தொற்றுநோயை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதார ஸ்திரத்தன்மையின் மதிப்பு தீவிரமடைந்துள்ளது. எனவே, வங்கிக் கணக்கில் சேமிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், பாதுகாப்பான எதிர்காலத்திற்கான நிதி அறிவைப் பற்றியும் குழந்தைகளுக்குக் உணர்த்துவது நமது முதன்மைப் பொறுப்பாகும். இதற்காக, பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தைகளை சேமிப்பின் பக்கம் திருப்பவும் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வருமாறும், சேமிப்பின் மதிப்பைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுமாறும் நாங்கள் அழைக்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஆண்டும், சிறுவர் சேமிப்புக் கணக்குகளைக் கொண்ட குழந்தைகளைச் சேமிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பல கவர்ச்சிகரமான பரிசுகளை HNB வழங்கியுள்ளது. சிங்கிதி ஜம்போ பேனா வைத்திருப்பவர்கள், HNB தொப்பிகள், குடைகள் மற்றும் பாடசாலை பைகளை பரிசாக வழங்க HNB ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், ரூ.50,000 வைப்புத் தொகைக்கு ரூ.2000/- மதிப்புள்ள வவுச்சரும், ரூ.100,000 வைப்புத் தொகைக்கு ரூ.5000/- மதிப்புள்ள வவுச்சரும், ரூ.250,000 வைப்புத் தொகைக்கு ரூ.12,500/-மதிப்புள்ள வவுச்சரும், ரூ.500,000/- வைப்புத் தொகைக்கு ரூ.25,000 மதிப்புள்ள வவுச்சரும் மற்றும் ரூ.1,000,000/- வைப்புக்கு ரூ.50,000 மதிப்புள்ள பரிசு வவுச்சர் பரிசாக வழங்கப்படும். அபான்ஸ், ஆர்பிகோ சூப்பர் சென்டர், டிஎஸ்ஐ, மல்லிகா ஹேமச்சந்திரா ஜூவல்லர்ஸ், நித்யகல்யாணி ஜூவல்லரி, ஸ்டோன் என் ஸ்ட்ரிங், சரசவி புக்க்‌ஷொப், விஜிதா யாப்பா மற்றும் சுஸி விற்பனை நிலையங்களில் குழந்தை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் விருப்பப்படி பொருட்களை வாங்கவும் இந்த வவுச்சர்கள் அனுமதிக்கின்றன. இல்லையெனில், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வவுச்சரின் மதிப்பை சிறிய கணக்கில் வைப்பு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. புதிதாக சிங்கிதி சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்கும் கணக்கு உரிமையாளர்கள், குறிப்பாக இந்த பண்டிகைக் காலத்தில், இந்தப் பலன்களைத் தவிர வேறு பல நன்மைகளையும் அனுபவிப்பார்கள்.

தேசத்தின் குழந்தைகளின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த தனித்துவமான திட்டம் அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதோடு, சிக்கனமான வாழ்க்கை முறையை நோக்கி அவர்களை வடிவமைக்கிறது.

மேலும், HNB சேமிப்புப் பழக்கத்தை வளர்க்கும் நோக்கத்துடன் சிறிய கணக்கு வைத்திருப்பவர்களுக்காக ஆண்டு முழுவதும் வெகுமதிகள் வழங்கும் முறைமையொன்றும் உள்ளது. இதன் விளைவாக, சிறுவர் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிரத்யேக காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த HNB Assurance உடன் HNB கூட்டிணைந்துள்ளது. இதற்காக HNB Assurance உடன் இணைந்து பணியாற்றுகிறது, தனது பிள்ளைக்காக நிலையான கட்டளை ஊடாக வைப்புச் செய்யும் அன்பானவருக்கு திடீர் மரணம் போன்ற துரதிஷ்டவமான நிகழ்வுகள், இயற்கை அல்லது தற்செயலான சம்பவங்கள் ஏற்பட்டால் நிலையான கட்டளையின் மூலம் அவரது குழந்தையின் கணக்கிற்காக செலுத்தும் 1,000 – 25,000 ரூபா வரையிலான தொகையை, குழந்தை 18 வயதை அடையும் வரை அந்த தொகையை அவர்களது கணக்கில் வைப்புச் செய்ய HNB உத்தரவாதமளிக்கின்றது.

HNB சிங்கிதி கணக்கின் ஆரம்பத்திலிருந்தே, மாணவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக, இளைஞர்களுக்கான உறுதியான வெகுமதிகளுடன் நிலையான சேமிப்பை இணைப்பதன் மூலம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கிதி சேமிப்பாளர்களுக்கு பணப்பரிசில்களை வழங்குவதற்காக “திரிதரு” புலமைப்பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எந்தவொரு இலங்கையிலுள்ள வங்கியினாலும் வழங்கப்படுகின்ற மிகப் பெரிய நிதியான Diri Daru பரிசுத் திட்டமானது சிங்கிதி கணக்குகளைக் கொண்ட க.பொ.த. மற்றும் லண்டன் O/L மற்றும் A/L மாணவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவில் கணக்கு நிலுவைகளை பேணினால் அவர்களுக்கும் பல புலமைப்பரிசுகளை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373