Date:

நாட்டில் இடைக்கால அரசாங்கம்?

நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பிலான யோசனையை சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுடன், வாசுதேவ நாணயக்கார மற்றும் டிரான் அலஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அமைச்சரவையினால் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வை முன்வைக்க முடியாது என தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக தற்போதைய அமைச்சரவையைக் கலைத்து விட்டு, இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக அனைத்துக் கட்சிகளுடனும் உடன்பாடொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தேர்தலொன்றுக்குச் செல்வதை விட, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதே பொருத்தமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு சிகரம் – ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் நமது தேசியக் கொடி

ஏழு கண்டங்களிலும் உள்ள, உயர்ந்த சிகரங்களின் உச்சிக்கு ஏறி வரலாற்றுச் சாதனை...

BYD இன் புகழ்பெற்ற SEAGULL மின்சார வாகனம் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி சாதனை

BYD நிறுவனத்தின் ஷியான் தொழிற்சாலையில் 2025 ஜூன் 30ஆம் திகதி தயாரிக்கப்பட்ட...

பங்களாதேஷில் மோதல்: 4 பேர் பலி; 50 பேருக்கு காயம்

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில்...