அடுத்த சில நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தை குறிப்பிடத்தக்களவு குறைப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
மின்னுற்பத்திக்கு போதுமானளவு எரிபொருளை ஒதுக்குவதாக மின்சக்தி மந்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எழுத்துமூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, இந்திய கடனுதவியின் கீழ் இன்று(03) 12,000 மெட்ரிக் தொன் டீசல் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, சொஜிஸ்ட் மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகளை இன்று(03) மீள ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறித்த மின்னுற்பத்தி நிலையத்திற்கு தேவையான டீசல் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பதில் முகாமையாளர் கலாநிதி ரோஹந்த அபேசேகர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், மின்னுற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(02) மின்னுற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து 270 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.