ஐக்கிய மகளிர் சக்தியினர் ஏற்பாடு செய்துள்ள பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை வரையிலான பெண்களின் போரட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ,எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல விடயங்களுக்கு கண்டனம் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய மகளிர் சக்தியினர் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை வரையிலான தாய்மார்களின் போராட்டம் எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளர், உமாச்சந்திரா பிரகாஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஐக்கிய மகளிர் சக்தி உறுப்பினர்கள் பலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான எதிர்ப்பு பேரணி யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை அண்மித்தபோது சிலர் இந்தப் பேரணிக்கு இடையூறு விளைவித்தனர்.