நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தக் காலகொண்டாட்ட ஆரம்ப நிகழ்வு இம் முறை இன்று (01) ஆரம்பமான நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த போராட்டம் நுவரெலியா பஸ் தரிப்பிடம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வசந்த கால ஆரம்ப நிகழ்வு இடம் பெறும் பகுதி வரை சென்றது.
இந்நிலையில், போராட்டகாரர்கள் கிறகரி குளம் பகுதியில் இடம் பெற்ற வசந்த கால ஆரம்ப நிகழ்வில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நுவரெலியா தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், நடத்துனர்கள் காலை 8.00 மணி முதல் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்டனர்.
அதாவது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கான எரிபொருள் வழங்கப்படுகின்றது எனவும் தனியார் பஸ்களுக்கான எரிபொருள் வழங்கவில்லை எனவும் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியங்களுடன் இடம் பெற்ற வசந்த கால ஆரம்ப நிகழ்வு போராட்டக்காரர்களின் குழப்பங்கள் காரணமாக முற்றாக நிறுத்தப்பட்டது.
இதனால் கிறகரி குளத்தின் அருகாமையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நுவரெலியா வெளிமடை பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.