மிரிஹானையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் வழியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மிரிஹானை – பெங்கிரிவத்த வீதியிலேயே இந்த ஆர்ப்பாட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
#MirihanaProtest
இதனை அடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.