Date:

மைத்திரிபால சிறிசேனவிற்கு உத்தியோகபூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு தடை உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பெஜெட் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இலங்கை உச்ச நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் (CPA) மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பைக்கியசோதி சரவணமுத்து ஆகியோரால் FR மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

மஹகம சேகர மாவத்தையில் (பேஜட் வீதி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடியமர்த்தப்பட்டுள்ள இல்லமானது பெரும் நிதிப் பெறுமதி உடையது எனவும் அது நாட்டுக்கு பெறுமதியான சொத்து எனவும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அரச தலைவரின் பணிகளை மேற்கொள்ளாத முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இவ்வளவு நிதி மதிப்புடைய பொதுச் சொத்தை ஒதுக்கீடு செய்வது பகுத்தறிவற்றது, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்று CPA குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், ஓய்வுபெறும் ஜனாதிபதியின் பலன்கள் குறித்து அமைச்சர்கள் அமைச்சரவை முடிவெடுப்பது போன்ற காரணங்களின் அடிப்படையில், அரசியலமைப்பின் 12(1) (சமத்துவத்திற்கான உரிமை) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனுதாரர்கள் மற்றும் இலங்கையின் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மேற்கூறிய அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை மீறப்பட்டுள்ளதாக CPA வாதிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவில் கடந்த 3 நாட்களில் மாத்திரம் உணவின்றி 21 குழந்தைகள் உயிரிழப்பு

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு...

ரணிலின் தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில்...

வவுணதீவு படுகொலை – பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சி.ஐ டி யினரால் கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை...