தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதி கருதி, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து எவ்வித அசௌகரியமும் இன்றி பஸ் சேவைகளை முன்னெடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில், 24 மணி நேரமும் விசேட செயற்பாட்டு அறையொன்றும் இயங்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புத்தாண்டை முன்னிட்டு பயணிகள் போக்குவரத்து சேவை இரண்டு கட்டங்களாக அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன் முதல் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் 08 முதல் 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கபடவுள்ளது.
கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பிரதான பஸ் தரிப்பிடத்தில் பஸ் சேவைக்கான தேவை அதிகரித்தால் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு இலவசமாக தற்காலிக பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.