Date:

புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் பிரச்சினை குறைவடையும் -வலுசக்தி அமைச்சர்

புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் பிரச்சினை குறைவடையும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் செயற்பாடு எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வளம் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கான மேலதிக ஆய்வுகள் இடம்பெறுகின்றன.

மேலும் ஒரு வருடத்திற்குள் நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் மற்றும் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் மக்கள் இன்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...