ஒரு கிலோ பேரீச்சம்பழத்திற்கு விசேட இறக்குமதி வரியான ரூ.50ஐ குறைக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் இன்று முதல் பேரீச்சம் பழ இறக்குமதிக்கான விசேட பண்ட வரி, 200 ரூபாவாக விதிக்கப்பட்டு வந்தநிலையில், குறித்த வரியானது 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஒரு ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் ரமலான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு நிவாரண நடவடிக்கையாகவே இந்த வரி குறைப்பு பற்றி நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேரீச்சம்பழங்களை இறக்குமதி செய்வது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படும் செய்திகளை மறுத்துள்ள அமைச்சகம், இது தீய நோக்கத்துடன் பரப்பப்படும் வதந்தி எனவும் குறிப்பிட்டுள்ளது.