எரிபொருள் வரிசையில் காத்திருந்தபோது நிகழ்ந்த மேலுமொரு மரணம் பதிவாகியுள்ளது.
அத்துருகிரிய பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொண்ட நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த சனிக்கிழமை (26) எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மரணத்திற்கான காரணம் மாரடைப்பு எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் 85 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.