சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் உடனடியாக நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடப்பில் 95 பக்கள் அடங்கிய ஆவணத்தை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.
அது தொடர்பில் உடனடியாக நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துமாறு ரணில் இன்று (27) கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதற்காக சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றை தெரிவு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குழு ஒன்றை நியமித்துள்ளார்.
இந்த குழுவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்றி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.