மாவனெல்லை-பெமினிவத்த பிரதேசத்தில் மின்னல் தாக்கியத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்த நபருக்கான இறுதிக் கிரியை சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மாவனெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.