எதிர்வரும் 26 – 30 ஆம் திகதிகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இரு நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முதலில் மாலைத்தீவுக்கு விஜயம் செய்யும் அவர், மார்ச் 26 – 27 ஆம் திகதிகளில் ஜனாதிபதி இப்ராஹிம் சோலி, வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துடன் கலந்துரையாடவுள்ளார்.
இதனையடுத்து, இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பிக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர், எதிர்வரும் 28 – 30 ஆம் திகதிகளில் இலங்கையின் முக்கிய தரப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 29 ஆம்திகதி கொழும்பில் நடைபெறும் BIMSTEC அமைச்சர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிவித்தலில் தெரிவித்துள்ளது.