நாளுக்கு நாள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கி வரும் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான தலையென்பது இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சவினுடையது. இவரை மீறி முடிவெடுக்க முடியாது நிலையில் கோட்டாபய – பசில் ஆகியோர் செயற்பட்டு வருவதாக அமெரிக்காவின் சாஷ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மகிந்த ராஜபக்ச என்பவர் இயல்பாகவே சீன சார்பான தலைவர். அவர் திடீரென மாற்றமடைந்து சீனாவிடமிருந்து விலகி செயற்படுவதென்பது நடக்காத விடயம்.
சீனாவிற்கும்,இலங்கைக்கும் இடையில் தற்போது காணப்படும் முறுகல் நிலையானது கடனை திரும்ப செலுத்த வேண்டிய பிரச்சினை மட்டுமே காணப்படுகின்றது. இந்த விடயத்தில் இலங்கையின் தந்திரோபாயம் தற்போது செயற்பட்டு வருகின்றது.
இந்த சந்தர்ப்பத்தை இந்தியா பயன்படுத்தி கடனை வழங்கி செயற்பட்டு வருகின்றது.இருப்பினும் இலங்கையை சீனா இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு ஒருபோதும் இலங்கையை விட்டு விலகாது.
இலங்கையானது ஒரு தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும்.இதன் காரணமானவே சீனா,அமெரிக்கா,இந்தியா போன்ற நாடுகள் இலங்கை மீது கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது.
இலங்கையில் தற்போது காணப்படும் நெருக்கடி நிலையினை பயன்படுத்தி அமெரிக்கா எம்.சீ.சீ உடன்படிக்கையை செயற்படுத்தும் முயற்சியில் செயற்பட்டு வருகின்றது.இலங்கையில் தனது செல்வாக்கினை அதிகரிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.